ஓற்றுமையைப் பலப்படுத்துவோம்- டாக்டர் என். ஆரிப்

ஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான புனித ஹஜ்ஜை உலகின் பல பாகங்களிலுமிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஈகைத்திருநாளாம் ஹஜ்ஜூப்பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் 'ஈதுல் அழ்ஹா' பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

ஓற்றுமை, சகோதரத்துவம், தியாகம் என்பவற்றை வலியுறுத்தும் இந்த ஈகைத்திருநாளில், நாம் எமது சன்மார்க்க விழுமியங்களைப் பேணி நடப்பதன் மூலமாக ஏனைய சமூகத்தைச் சார்ந்த மக்களின் மனங்களில் மாற்றங்களை உண்டு பண்ண முயற்சிப்போம். ஏனெனில், பல்வேறுபட்ட அபாயகரமான எதிர்கால சூழ்ச்சிகளுக்கெல்லாம் முகங்கொடுக்க வேண்டிய தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தருவானாக!

மூன்று தசாப்தகால கோர யுத்தத்திலிருந்து மீண்டிருக்கின்ற வேளையில், பலவிதமான மாற்று சிந்தனைகளுடன் மீண்டுமொரு அழிவை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு சென்று விடுவார்களோ என்றதொரு ஐயம் நிலவுகின்றது. இந்த வேளையில், அப்படியானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் காரணமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

எனவே, இந்த நாளை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு, புனித ஹஜ்ஜூப் பெருநாளை உவகையோடு கொண்டாடிக் கொண்டே, மாற்று சமூக சகோதரர்களின் மனங்களில் நல்லெண்ணம் ஏற்படுவதற்கு முயற்சிப்போமாக! 

டாக்டர் என். ஆரிப்

மாவட்ட வைத்திய அதிகாரி, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை
நம்பிக்கையாளர் சபை உறுப்பினர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல்
தலைவர், பிறைட் பியுச்சர் பவுண்டேசன், சாய்ந்தமருது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :