கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்- செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் வாழ்த்து

அஸ்லம் எஸ்.மௌலானா-

லகளாவிய ரீதியில் இன்று மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான வாழ்வுக்கு இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்- செனட்டர் அல்ஹாஜ் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இன்று உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் தொடக்கம் ஈராக், சிரியா வரை பல அரபு, முஸ்லிம் நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர்.

உள்நாட்டில் தலை தூக்குகின்ற முரண்பாடுகள் மற்றும் போராட்டங்களை சாட்டாக வைத்து மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகளுள் ஊடுருவி அங்கெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றி வருகின்றன. குறிப்பாக அரபுலகின் பலத்தை அழித்தொழிக்கும் பாரிய சதித் திட்டத்துடன் ஏகாதிபத்திய சக்திகள் பல சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றன.

அதேவேளை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற பல நாடுகளில் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் முஸ்லிம்கள் ஒடுக்குதலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் முஸ்லிம்களிடையே சமூக ரீதியான ஒற்றுமை பலவீனமடைந்திருப்பதேயாகும்.

ஆகையினால் புனித மக்காவில் நாடு, நிறம், வசதி வாய்ப்புகள் மற்றும் பேதங்களை மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே கொள்கை கோஷத்துடன் சமத்துவமாக ஒன்றிணைவது போன்று உலகளாவிய முஸ்லிம் உம்மத் முழுமையாக ஒற்றுமைப்பட்டு- ஒரு முன்மாதிரியான சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம்.

அதேவேளை உலகின் பல பாகங்களிலும் எமது நாட்டிலும் வன்முறைகள் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு- பல இன்னல்களுகளை எதிர்நோக்கியுள்ள எமது சகோதரர்களின் விடிவுக்காக இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். -ஈத்முபாரக்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :