பாலமுனை கிராமத்தில் இதுவரையும் மின்சாரம் இல்லாத இடங்களுக்கு பைஷல் காசிம் MPயால் மின்சாரம்

பாலமுனை கிராமத்தில் இதுவரையும் மின்சார விஸ்தரிப்பின்றி நீண்ட காலமாக இருளடைந்து காணப்படுகின்ற வீதிகளுக்கு மின்சார விஸ்தரிப்பை பெற்றுத்தருமாறு பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினர் பாராளுமண்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அம்பாரை மாவட்ட மின்னியல் நிர்மானப் பொறியியலாளர் ஹைகல் மற்றும் மின் அத்தியட்சகர் ரவி ஆகியோருடன் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு வருகைதந்த பாராளுமண்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்கள் ஏற்கனவே தன்னால் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளிற்கேற்ப தற்போது அநுமதி கிடைக்கப்பெற்றுள்ள உதுமாபுரம் சின்னப்பாலமுனை, ஹுஸைனிய்யா நகர் மற்றும் பாலமுனை 04,05 ஆம் பிரிவுகளில் காணப்படுகின்ற மின்சார விஸ்தரிப்பற்ற வீதிகளுக்கு மிpன்சார விஸ்தரிப்பு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மிpன் பொறியியலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்துவரும் இருவாரங்களுக்குள்ளாக குறித்த பிரதேசங்களுக்கான மின்சார விஸ்தரிப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட ;ட மின்னியல் நிர்மானப் பொறியியலாளர் ஹைகல் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :