காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றவூப் முஹம்மட் சியாம் இவரைக்காணவில்லை

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இலக்கம் 476,ஹிழுறியா ஜூம்மா பள்ளிவாயல் வீதி , மஞ்சந்தொடுவாய்,மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் வயது 18 முஸ்லிம் இளைஞனை கடந்த 19-09-2014 திகதி தொடக்கம் 01-10-2014 இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எனது மகன் முஹம்மட் சியாமை காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 20-09-2014 திகதி முறைபாப்பாடு செய்ததாகவும் அவரை கண்டவர்கள் 0779344130 எனும் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவரின் தந்தை பொது மக்களை வேண்டிக்கொள்கின்றார்.

1997-03-30 திகதி பிறந்த முஹம்மட் சியாம் காத்தான்குடி தேசியப் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவு ஐ.சி.டி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 தினங்களாக காணாமல் போயுள்ள குறித்த முஸ்லிம் இளைஞனின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 970903330எ என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :