Jaffna BCAS Campus இன் பூரண அனுசரனையில் முதலாவது அறிவூச்சுரங்கம் வினாவிடைப் போட்டி அண்மையில் யாழ் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. இதன் போது இந்நிகழ்வில் அப்பாடசாலை மாணவர்கள் அதிகளவானோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக அறிவிப்பாளர் ஏ.ஆர் எம் ஜிப்றி மற்றும் அறிவிப்பாளர் மனித நேயன் இர்சாத் ஏ. காதர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
Jaffna BCAS Campus இன் சார்பாக அதன் சந்தைப்படுத்தல் இணைப்பாளர் வை.எம் சாதிக்கீன் கலந்து கொண்டதுடன்.இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபானத் தமிழ் பிரிவினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அறிவுச்சுரங்கம் தற்பொழுது முதற்தடவையாக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment