பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் தீயணைப்பு வாகன கையளிப்பு நிகழ்வும் 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும்,தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வினால் 10 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள தீயணைப்பு பிரிவு கட்டடத்தின் அடிக்கல் நடப்பட்டதோடு 44 மில்லின் ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிக்கப் என்பவற்றின் ஆவணங்களை மாநாகர ஆணையாளர் எம். உதயகுமாரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலிசாஹிர் மௌலானா, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஏ. மஜீத் உட்பட அமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள் ,மதப் பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
.jpg)
%2Bcopy.jpg)
.jpg)
.jpg)
%2Bcopy.jpg)
.jpg)

%2Bcopy.jpg)
.jpg)
0 comments :
Post a Comment