மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக குழந்தை மருத்துவ பிரிவை கணனிமயப்படுத்தும் நிகழ்வு 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டு- போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸி நவரட்னராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ர்ரவஉh ஹட்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமையக சந்தைப்படுத்தல்; முகாமையாளர் திருமதி றம்சீனா லே கலந்து கொண்டார்.
இதன் போது ஹட்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அனுசரனையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கணனி வலையமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.jpg)
இங்கு போது கட்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் சிறுவர்களின் பதிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கோவைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொம்மைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஹட்ச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமையக சந்தைப்படுத்தல்; முகாமையாளர் திருமதி றம்சீனா லே , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸி நவரட்னராஜா ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமதி அஞ்சலா அருள்பிரகாசம், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் கே.கருணாகரன், வைத்தியர்கள் , ஹட்ச் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment