ஒற்றுமையுடன் முன் மாதிரிச் சமூகமாக வாழ தியாகத் திருநாளில் பிரார்த்திப்போம்- ஆரிப் சம்சுடீன் MPC

எம்.எம்.ஏ.ஸமட்-

ஸ்லாமிய வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்ற செய்து ஒற்றுமையுடன் முன் மாதிரிச் சமூகமாக வாழ தியாகத் திருநாளில் பிரார்த்திப்போம்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள தியாத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் ஐம்பெறும் கடமைகளில் இறுதிக் கடமையான புனித ஹஜ் ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் பின்பற்றி ஒழுக வேண்டிய பல படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது. இறை தியாகம், சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, தலைமைத்துவக் கட்டுப்பாடு. பொறுமை, சகிப்புத்தன்மை என மனித நாகரியத்தின் அத்தனை பண்புகளையும் ஹஜ் போதிக்கிறது. 

ஆனால், நாம் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வதில் அசமந்தப்போக்குடையவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் வழிமுறைகளை நாம்; மறந்து செயற்படுவதினாலேதான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இஸ்லாம் கற்றுத் தரும் வாழ்க்கை வழி முறைகள் நமது வாழ்வில் சரியாகப் பின்பற்றப்படுமாயின்  நம்மை எதிர் நோக்கும் அத்தனை சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றில் வெற்றி காண முடியும் இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் நெருக்கடியற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் நாம் இஸ்லாம் போதிக்கும் வாழ்க்கைப் பண்புளோடு வாழ இன்னும் தயாராகவில்லை என்பதே மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கும் சதிகாரர்களின் வலையில் அதன் கதாபாத்திரங்களில் முஸ்லிம்கள் தினமும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்குக் காரணம் இஸ்லாத்தின் வழியில் முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாததுதான்

கொள்கை கோட்பாடு. அரசியல் என ஒவ்வொரு விடயத்திலும் கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள, விட்டுக்கொடுக்காத் தன்மை, சண்டை சச்சரவுகள் என்று முஸ்லிம்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நின்று செயற்படுவது சதிகாரர்கள் தங்களது முஸ்லிம்கள் தொடர்பான இலக்குகளை இலகுவில் அடைந்து கொள்வதற்கு சாதகமாக அமைந்து விட்டன.
பெருநாள் என்பது புத்தாடை அணிவதும் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் என்ற மரபு வழிகளிலேயே நாம் இன்றும் உள்ளோம். அந் நிலையிலிருந்து விலகி, தியாகத் திருநாள் கற்றுத் தரும் மனித நாகரியத்தின் பண்புகளை இத்தினத்திலும் இதன் பின்னரும் நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதை வெளிப்படுத்த வேண்டும்.

சாந்தி, சமாதானம். சகோதரத்துவம், சமத்துவம், மனித நேயம் என்ற நல்ல விழிமியங்கள் இந்நாட்டில் வாழும் சகல சமூகங்களிடமும் உருவாக வேண்டும். 

நல்ல விழுமியங்களோடு வாழும் முன்மாதிரியான சமூகமாக முஸ்லிம்கள் இந்நாட்டில் மிளிர வேண்டுமாயின், நமது வாழக்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் இஸ்லாம் கற்றுத்தரும் நல் வழிகள்; பின்பற்றப்பட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்ற செய்து ஒற்றுமையுடன் முன்மாதிரிச் சமூகமாக வாழ இத்தியாகத் திருநாளில் பிரார்த்திப்போம். 

அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இதயபூர்வமான தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள தியாத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :