எப்போதும் பிரஷ்ஷாக காணப்படும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைக்குப் போனது முதல் தாடியுடன் கூடிய முகத்துடன் சிரிப்பை மறந்தவராக வலம் வருகிறார்.
நீட்டான முகத்துடன், குங்குமப் பொட்டு வைத்த முகத்துடன் பளிச்சென, அதிராத புன்னகையுடன் காணப்படுவார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் ஜெயலலிதா சிறைக்குப் போனது முதலே இவர் சோகமாக காணப்படுகிறார். வழக்கமான சிரிப்பைக் காண முடியவில்லை. முகத்திலும் தாடியுடன் காணப்படுகிறார்.
ஜெயலலிதா வெளியே வரும் வரை இப்படித்தான் முதல்வர் இருப்பார் என்று தெரிகிறது. சோகம் மற்றும் கூடுதல் அமைதியுடன் இறுக்கமாகவே காணப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்போதும் கூட எப்போதும் போல இவர் இருப்பதில்லையாம்.

0 comments :
Post a Comment