வத்தளையில் ஜ.ம.மு ஏற்பாட்டில் இலவச மூக்கு கண்ணாடி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்

னநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மருத்துவ பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் வத்தளை-மாபோலை நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05-10-2014) காலை 8-30 மணிமுதல் மாலை வரை நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பலனடையுமாறு கம்பஹா மாவட்ட பொதுமக்களுக்கு, ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ். சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் அறிவுறுத்தலின் பேரில், ஜமமு கம்பஹா மாவட்ட செயற்குழுவின் சார்பாக நடத்தப்படும் இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்வில், நீரழிவு, உடல் அழுத்தம், கண் பார்வை ஆகியவை தொடர்பான பரிசோதனைகள் நடைபெறும். அத்துடன் அவசியமானவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படும். மருத்துவ முகாமை கொண்டு நடத்துவதற்காக மருத்துவர்களும், சுகாதார அலுவலர்களும் கலந்துகொள்வார்கள்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்நிகழ்வு தொடர்பில் மேலதிக விபரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், மாவட்ட அமைப்பு செயலாளருமான எஸ். சசிகுமாரை 0771425390 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :