'டெங்கு இல்லாத இலங்கை' கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முதலிடம்.




ஹாசிப் யாஸீன்-

பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பற்றிய அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் 'டெங்கு இல்லாத இலங்கை' எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சும்; கல்வி அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் சித்திரப் போட்டியினை நடாத்தியது.

இதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 'டெங்கு இல்லாத இலங்கை' சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனைப் பிராந்திய தொற்றா நோய் விஞ்ஞானப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் சீ.என்.செனரத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆசிரியை பர்ஸானா சம்சுதீன், அக்கரைப்பற்று மத்திய கல்லூhரி ஆசிரியை எம்.சமீறா பீவி, கல்முனை பாத்திமா கல்லூரி ஆசிரியை ஏ.சிராஜினி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்சித்தரப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் ஐ.எம்.ஆதிலுக்;கு இருபத்தையாயிரம் ரூபாவும், பாடசாலைக்கு இருபத்தையாயிரம் ரூபாவும் சான்றிதலும் வழங்கப்பட்டது.

இதேவேளை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவி கே.எம்.நுசைபாவுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபா பணப்பரிசும் சான்றிதலும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலய மாணவன் அர்சாத் ஷம்ஸ் ஆரிபுக்கு ஐயாயிரம் ரூபா பணப்பரிசும் சான்றிதலும், மூன்றாம் இடத்தைப் பெற்ற பொத்துவில் அல்-இர்பான் பெண்கள் கல்லூரி மாணவி ஏ.எச்.எப்.சமிஹா நூறிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா பணப்பரிசும் சான்றிதலும்; வழங்கப்பட்டன.

ஆறுதல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா பணப்பரிசும் சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :