முபாறக் அப்துல் மஜீத் மௌலவி-
இன்று அதிகாலை முதல் மக்காவில் ஹஜ்ஜுக்காக கூடியிருக்கும் முஸ்லிம்கள் அரபா மைதானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். துல் ஹஜ் மாதம் 9ம் திகதி ஹாஜிகள் அறபாவுக்கு செல்ல வேண்டும் என்பது இறைதூதரின் கட்டளையாகும். அறபா மைதானத்தில் இன்று சூரியன் உச்சிக்கு வருமுன் சென்றடைய வேண்டும். அது முதல் சூரியன் மறையும் வரை அங்கு தரித்திருப்பது கட்டாய கடமையாகும். இதனை தவற விடும் ஒருவர் ஹஜ் செய்தவராகமாட்டார்.
இன்றைய அறபா தினத்தில் ஹஜ்ஜுக்கு செல்லாதோர் நோன்பு பிடிப்பதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அதன் படி துல் ஹஜ் மாதம் 9ந்திகதியில் நீங்கள் நோன்பு பிடியுங்கள் என சொல்லாமல் அறபா தினத்தில் நோன்பு இருக்கும்படியே நபியவர்கள் தெளிவாக சொல்லியிருப்பதற்கணங்க உலகளாவிய முஸ்லிம் சமூகம் இன்றைய நாளை அறபா நாளாக ஏற்றுள்ளது.
நாளையும் நாளைய மறுதினமும் அதற்கு அடுத்த நாளும் பெருநாட்கள் தினங்களாக உள்ளன. அய்யாமு தஷ்ரீக்குடைய மூன்று நாட்களும் பெருநாள் தினமாகுமென நபியவர்கள் சொல்லியுள்ளதால் அன்றைய தினங்களில் நோன்பு வைப்பது தடுக்கப்பட்டதாகும்.
இன்றைய நாளை அறபா தினமாக ஏற்றவர்களுக்கு இறைவன் அருள் பரிவானாக.

0 comments :
Post a Comment