தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த கட்டிடங்கள் இடித்தழிப்பு-- வீடியோ

ம்புள்ளை கைரியா ஜும்மா பள்ளிவாயளுக்கு முன்னால் அமைந்துள்ள புத்ததாச எனும் வைத்தியருக்கும் இன்னும் இரு சிங்களவர்களுக்கு சொந்தமான காணிகளில் அமைந்திருந்த மூன்று கட்டிடங்களை தம்புள்ளை ரன்கிரி ராஜமகா விகாரையின் பிரதம தேரர் நேற்று முந்தினம் அப்புறப்படுத்தியுள்ளார்.

தம்புள்ளை ரன்கிரி ராஜமகா விகாரையின் பிரதம தேரர் குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயலை அகற்ற கூறி கடந்த காலங்களில் கோரிக்கை முன்வைத்துவரும் குறித்த தேரரின் நேரடி மேற்பார்வையில் பள்ளிவாயளுக்கு அருகில் உள்ள சிங்களவர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் முற்றுமுழுதாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சிங்களவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை அகற்றும் போது ஸ்தலத்தில் இருந்த தம்புள்ளை ரன்கிரி ராஜமகா விகாரையின் பிரதம தேரர் குறித்த பிரதேசத்தில் உள்ள மற்றைய கட்டிடங்கள் வரும் வாரம் அகற்றப்படும் என தெரிவித்துள்ளதுடன் வரும் வாரத்துக்குள் பிரதேசவாசிகள் தமது உடமைகளை அப்புறப்படுத்துமாறு சொல்லிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வைத்தியர் புத்ததாச அவர்களின் மகன் அவரது கட்டிடத்திறக்கும் அங்கிருந்த பொருற்களுக்கும் தேசம் ஏற்பட்டமைக்கு தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் எழுபத்தியைந்து லட்சம் நஷ்டஈடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந் நிலையில் தம்புள்ள பள்ளிவாசலுக்கு தொடர்ந்தும் பாரிய அச்சுறுத்தல் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TIN.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :