திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அக்கரைப்பற்று ஆலிம் நகர் மையவாடிக்கான சுற்றுமதில் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் பின்தங்கிய கிராமமான ஆலிம் நகர் கிராமத்தின் மையவாடிக்கு சுற்றுமதில் அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் மத்தியகுழு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் எடுத்துக்கூறியது. இதன் காரணமாக சுற்றுமதில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மற்றும் அதிதிகள் உரைநிகழ்த்தினர். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றும்போது, இங்கு மேலும் செய்யப்படவேண்டிய வேலைகளுக்கு நிதியை ஒதுக்கித்தருவதற்கு ஏற்பாடுகளைச் செய்யவுள்ளேன். அத்தோடு இக்கிராமத்தின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் எங்களது கவனத்தைச் செலுத்துவோம் என்றார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், உலமாக்கல் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உபதலைவரும், தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன், மத்தியகுழு செயலாளர் எம்.நக்கீல், ஆலிம் நகர் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் அலி, மூத்த இலக்கியவாதியும்,ஓய்வு பெற்ற ஆசிரியருமான பாறுக் ஷரிபுத்தீன்,உட்பட மத்திய குழு அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment