அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நபி இப்ராஹீம் (அலை) அவர்களது தியாகத்தை நினைவுறுத்தும் புனித நாள். இதுவாகும். அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளமையை வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். இவை இன்றைய கால கட்டத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் சிறந்த படிப்பினையைத் தருகின்றது.
இன்று இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் சோதனைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நிம்மதி நம்மை விட்டும் தொலைக்கப் பட்டுள்ளது. எனவே, இவற்றை வெற்றி கொள்ள நாம் பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் பொய் வாக்குறுதிகளால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். நம்மைப் பயன்படுத்தி நன்மைகள் பெற்றுக் கொள்ளப் பட்ட அதேவேளை ஏனைய சந்தர்;ப்பங்களில் புறக்கணிக்கப்பட்டு தேடுவாரற்ற சமூகமாக வாழ்ந்திருக்கிறோம். இதனை மனதில் கொண்டு எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறை வழிகாட்டல்களை கவனத்தில் கொண்டு பொறுமை தியாகம் என்பவற்றினூடாக இறையன்பைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும். வாழ்வின் சகல அம்சங்களிலும் இதனை நாம் கடைப்பிடிப்போமாக.
.jpg)
0 comments :
Post a Comment