பேரினவாத சக்திகளின் நெருக்கடிகளில் இருந்து முஸ்லிம் சமூகம் விடுதலை பெற்றுஇ அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாக வாழ்வதற்கான புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கு இந்த ஈகைத் திருநாளில் திட சங்கற்பம் பூணுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இன்று பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி கலாசாரஇ சமூகஇ பொருளாதார பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் பேரின கடும்போக்குவாத அமைப்புகள் மூர்க்கத்துடன் செயற்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்களும் மதரசாக்களும் அரச அனுசரணையுடன் பலவந்தமாக மூடப்படுகின்றன.
கடந்த சில வருடங்களாக தமது பாதுகாப்பு தொடர்பில் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் கணக்கில் எடுக்கப்படாமல் முற்றாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் கையறு நிலையில் காணப்படுகின்றன. இந்த அபாயகரமான சூழ்நிலை தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது.
இந்நிலையில் போலி அரசியலுக்குள் சிக்குண்டிருக்கின்ற நமது முஸ்லிம் சகோதரர்கள் மாற்று சிந்தனைகளுடன் நீதி நேர்மையான அரசியல் பயணத்திற்கு தயாராக வேண்டும். அதுவே இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்கும் வாழ்வுரிமைக்கும் வழியேற்படுத்தும் என்பதை இனியாவது அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்காக இப்புனிதத் திருநாளில் ஏமாற்று மாயைகளில் இருந்து விடுபட்டு திறந்த மனதுடன் சிந்தித்து புதிய பயணத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வோம். -ஈத்முபாறக்-
.jpg)
0 comments :
Post a Comment