ஒலுவில் ஜாயிஷாவில்நடைபெற்ற உலக சிறுவர் தினமும், கல்விக் கண்காட்சியும்





அனாசமி-

க்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டப்பாடசாலையான ஒலுவில் அல் ஜாயிஷா பெண்கள் கல்லூரியில் உலக சிறுவர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்வோடு ஒட்டியதாக ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான கண்காட்சிக் கூடம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது. வித்தியாலய அதிபர் இஸட் கலிலுர் றகுமான் தலைiயில், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியினைத் திறந்துவைத்தார். 

கண்காட்சிக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்றல் உபகரணங்களை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி அதிகாரிகள், அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் பெருமுயற்சியின் பயனாக இவ்விழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :