புதிய முதல்வர் எம்.எல்.ஏக்களை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களை பார்க்க ஜெயலலிதா விரும்பாததால், அவர்கள் சென்னை திரும்பினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை, முதல்வர் பன்னீர்செல்வம் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை சென் றார். இரவில் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு சில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து நேற்று காலை அவர் சிறைக்கு சென்று ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக போலீசாருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வாகனங்களில் வந்து குவிந்தனர். அந்தப் பகுதியில் 144 தடை தீவிர அமலில் இருந்தது. எனவே, சோதனைக்கு பின்னரே பரப்பன அக்ரஹாரா பகுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் முதல் வர், வருகையொட்டி தமிழக அமைச்சர்களான வளர்மதி, கோகுல இந்திரா, தங்கமணி, செந்தில் பாலாஜி, எஸ்.பி வேலுமணி, மோகன், சுந்தர்ராஜ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் சிறை வளாகத்தில் முன்கூட்டியே வந்து குவித்தனர். இதற்கிடையே பன்னீர்செல்வம் வருகை குறித்து 2 முறை ஜெயலலிதாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் உட்பட யாரையும், சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓட்டலிலேயே அவர் தங்கியிருந்தார். பிற்பகலில், சசிகலாவிடம் இருந்து ஒரு கடிதம் மட்டும் பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னை திரும்பினார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் இருந்து நேராக வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து தலைமைச் செயலகம் வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிறிது நேரத்தில், டிஜிபி ராமானுஜம் அவரை சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றார். அதன்பின் தமிழகத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் தொடர்பான உத்தரவு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

அதில், உயர் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதாவுக்கு தவறான தகவலை கொடுத்து போலீஸ் அதிகாரிகள்தான் சிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளதால், இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.<தினகரன்>

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :