சலுகை என்ற அடிப்படையில் லஞ்சமாக வழங்கப்பட்ட பட்ஜட்!

னா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்து சலுகை என்ற அடிப்­ப­டையில் இலஞ்­ச­மாக வழங்­கப்­பட்­டதே 2015 ஆம் ஆண்­டிற்­கான வரவு - செலவுத் திட்­ட­மாகும். குறித்த திட்­டத்­தி­னூ­டாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் ஒரு­போதும் நிறை­வேற்றப் போவ­தில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடக பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.

இந்த வரவு செல­வுத்­திட்­டத்­தி­னூ­டாக 46 சத­வீ­தத்­தினை ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரே பங்கு கொண்­டுள்­ளனர். மேலும் கட­னுக்கு மேல் கடன் வாங்கி பாரத்தை மக்கள் மீது சுமத்தும் வரவு செலவுத் திட்­டத்­தையே அரசு இம்­மு­றையும் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

பத்­த­ர­முல்ல பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. யின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று

இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

உற்­பத்­தியை கொண்டு வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு பதி­லாக கட­னுக்கு மேல் கடன் பெறும் வரவு - செலவு திட்ட அறிக்­கை­யையே அரசு இம்­மு­றையும் சமர்ப்­பித்­துள்­ளது.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உப­தே­சத்­திற்கு அமை­யவே இந்த திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய பற்­றாக்­கு­றையின் தொகையை அதி­க­ரித்­துள்­ளது. அத்­தோடு இந்த வரவு செலவுத் திட்­டத்­தி­னூ­டாக 840 பில்­லியன் ரூபா கடன் தவணை கொடுப்­ப­னவை செலுத்­து­வ­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே கடன் தவணை கொடுப்­ப­னவை செலுத்­து­வ­தற்கு பதி­லாக மேலும் கடனை பெறவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இதற்­க­மைய குறித்த கடன் தொகையை மக்­களே செலுத்த வேண்­டி­யுள்­ளது.

அத்­தோடு இவ்­வ­ரு­டத்தை போன்று மறை­மு­க­மாக கடன் பெறு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. அதா­வது அபி­வி­ருத்தி என்ற பெயரில் அமைச்­சுக்­க­ளி­னூ­டா­கவும் வங்­கி­க­ளி­னூ­டா­கவும் கடன் பெற­வுள்­ளது. எனவே குறித்த கடனை அரசு கடன் தவணை கொடுப்­ப­னவில் இணைக்­க­வில்லை. ஆகவே தவணை கொடுப்­ப­னவு 840 பில்­லியன் என்­பது தவ­றா­ன­தாகும்.

மேலும், அரசு பல­வந்­த­மான முறையில் வங்­கி­க­ளி­ட­மி­ருந்து கடன் பெற­வுள்­ளது. இதனால் வங்­கி­க­ளுக்கே நஷ்டம் ஏற்­படும். இவ்­வா­றான நிலை­மைதான் தேசிய சேமிப்பு வங்­கிக்கு இவ்­வ­ருடம் ஏற்­பட்­டது.

எனவே, சலுகை என்ற அடிப்­ப­டையில் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அரசு இவ்­வ­ரவு செலவு திட்­டத்தில் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி இந்த திட்­டத்தில் 46 சத­வீ­தத்தை ராஜபக் ஷ குடும்­பத்தின் அண்ணன், தம்­பி­களே பங்கு கொண்­டுள்­ளனர். இதற்­க­மைய நிதி அமைச்­சுக்கு 9.98

சத­வீ­தமும் பாது­காப்பு அமைச்­சுக்கு 15.73 சத­வீ­தமும் பொரு­ளா­தார அமைச்­சுக்கு 6 சத­வீ­தமும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்­சிற்கு 3.17 சத­வீ­தமும் அதி­வேக நெடுஞ்­சாலை அமைச்­சுக்கு 11 சத­வீ­மு­மாக 46 சத­வீ­தத்­தினை ஜனா­தி­ப­தியும் பசில் ராஜபக் ஷவுமே பகிர்ந்து கொண்­டுள்­ளனர். இருப்­பினும் ஏனைய கபினட் அமைச்­சர்கள் 65 பேரிற்கு 53 சத­வீ­தமே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இவற்றில் கடற்­றொழில் அமைச்­சிற்கு 0.3 சத­வீ­தமே ஒதுக்­கப்­பட்­டது. விவ­சா­யத்­திற்கும் சுகா­தா­ரத்­திற்கும் 2014 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்­டத்தை விட குறை­வா­கவே ஒதுக்­கி­டப்­பட்­டுள்­ளது.

எனவே, இந்த திட்டமானது தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இலஞ்சமாக வழங்கப்பட்டதாகும். 2005 இலிருந்து உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் மேடையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியொன்றல்ல. இது பாராளுமன்றில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :