உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயத்தில் பல்வேறு நிகழ்வுகள் உலக சிறுவர் தினமான நேற்று (01.10.2014) புதன்கிழமை நடாத்தப்பட்டன.
அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய அதிபர்; எம்.ஐ.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது சிறுவர் உரிமைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல் நிகழ்வோடு மாணவர்கள் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விளையாட்டு, கலை,கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.மாணவர்கள் கடல்மற்றும் கடற்கரைப் பிரதேசத்தையும் அதன் அழகையும் ரசித்ததோடு விளையாடியும் மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுகளில், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.ஹுஸைன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலத்தின்போது மாணவர்களுடன் அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டதுடன் மாணவர்கள் சிறுவர் உரிமையை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டவாறு முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்
.;
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment