முடிந்தால் ஞானசார தேரர் நேரடி விவாதத்திற்கு வரவு- முஜிபுர் ரஹ்மான் அழைப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய் பிராசரங்கள் குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து மேற்படி அமைப்பின் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

பொது பல சேனாவின் சங்க சம்மேளன மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றினார். 

அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானதாகும். முஸ்லிம், சிங்கள மக்கள் நீண்டகாலமாகவே இந்நாட்டில் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களால் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஞானசார தேரரினதும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளுமே முஸ்லிம், சிங்கள இன உறவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயங்கள் குறித்து நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு விரும்பினால் வாருமாறும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளலாம் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை முஸ்லிம் தலைமைகள் பொதுபலசேனாவுடன் நேரடி விவாதத்திற்கு முன் வரது பின்னிற்கிறது என அவ்வமைப்பின் செயலாளர் பல தடவைகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் ஞானசார தேரரை விவாதத்திற்கு அழைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :