நஸ்மி-உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியின் அக்கரைப்பற்று கிளையினால் நடாத்தப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வு அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியாலய அன்னை சாலிஹா மண்டபத்தில் வங்கியின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் தலைமையில் நேற்று (01.10.2014) நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன் அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதியாக அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.அப்துல் ஹையூ, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில்; 2013ல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்வர்களின் பிள்ளைகளுக்கு (மாணவ,மாணவிகளுக்கு) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் வழங்கப்பட்ட 15,000.00 ரூபாவிற்கான புலமைப் பரிசில் சான்றிதழ்,அந்தப் பணத்தை வங்கியிலிட்டமைக்கான அதற்கான வங்கிப் பாஸ் புத்தகம் மற்றும் வங்கியின் பரிசுப் பொருளாக ஆங்கில அகராதி, புத்தகப் பை என்பன வங்கியின் முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன்,ஆயிஷா பாளிகா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.அப்துல் ஹையூ மற்றும் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் ஆகியோhகளால் வழங்கப்பட்டன.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment