மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஏ.எச்.டி.நவாஸிற்கு நாளை நிந்தவூரில் பாராட்டு விழாவொன்று நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'மண்ணின் மைந்தன்-2014' எனும் மகுடத்தில் நிந்தவூர் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை பி.ப. 3.30 மணிக்கு நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் திறந்த வெளியரங்கில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.எம். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்னாலிருந்து விழா இடம்பெறும் இடத்திற்கு நீதிபதி அவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நீதிபதி அவர்களின் பாடசாலை வாழ்வு மற்றும் இதர செயற்பாடுகள் பற்றியும் கல்விமான்களும், உலமாக்களும் மற்றும் அரசியல்வாதிகளும் உரையாற்றவுள்ளனர்.
0 comments :
Post a Comment