சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு இலங்கை வானொலி பிறை எப். எம். நிறுவனத்தின் எற்பாட்டில் ஐ.சீ.பீ.ரீ கெம்பஸ், மினோ நிறுவனம், போச்சுனா கம்பனி, அக்கரைப்பற்று பறாடெக்ஷ;, லீ போன் ஆகிய நிறுவனங்களின் அனுசரனையுடன் சம்மாந்துறை றெட்றோஸ் சூ வேல்ட் நிறுவனத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இந்த சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் பிரதம அதீதியாக அம்பாறை மாவட்ட திவிநெகும வங்கி மற்றும் மகாசங்க கண்காணிப்பு உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ஏ.ஜே.எம்.ஹனீபா கலந்து கொண்டார்.
அதீதிகளாக ஓய்வுபெற்ற ஆசிரியரும் சமுக சேவையாளருமான மௌலவி எம்.எம்.எம்.யாசீன்பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை சிரேஷ்ட தொகுப்பாளரும் அறிவிப்பாளருமான எஸ்.எம்.எம்.ஜவாத் தொகுத்து வழங்கினார்.
இங்கு பல்வேறு போட்டி நிகழ்சிகளும் நடைபெற்றதுடன் போட்டியில் கலந்து கொண்டவர்கள் இ சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெறுமதிமிக்க லீபொன் நிறுவனத்தின் வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment