சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ்மகாவித்தியாலத்தின் ஆசிரியர் கௌரவிப்பு விழா, சாதணையாளர்கள் கௌரவிப்பு,பாடசாலை சுற்று மதிலுக்கான அடிக்கல் நடல் போன்ற முப்பெரும் விழா இன்று (27) கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது.
அதிபர் எஸ்.எம்.எம்.யூசூப் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்தகொண்டார்.
கௌரவ அதிதிகளாக மைஹோப் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பவற்றின் அதிபர் லயன்சித்தீக் நதீர் எம்.ஜே.எப், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் செயலாளர்எம்.முனாஸ், நாவிதன் வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பிட உறுப்பினர் ஏ.சீ.ஏ.நிசார், பாராளுமன்றஉறுப்பினரின் நாவிதன் வெளி பிரதேச இணைப்பாளர் எ.எம்.மஹ்றூப் உட்பட பல பிரமுகர்கள்கலந்த கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது சர்வதேச ஆசிரியர் தினத்தையிட்டு அதிபர் ஆசிரியர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் இப் பாடசாலையில் கல்விகற்று இலங்கைகல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர்களானஏ.எம்.நௌஷhட்,ஹைதர்அலி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
மேலும் உலக குடியிருப்பு தினத்தையிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால்நடாத்தப்பட்ட தேசிய கட்டுரைப் போட்டியில பங்;குபற்றி அகில இலங்கை ரிதியில் முதலிடம்பெற்று ஜனாதிபதி விருது பெற்ற மாணவி யூசூப் பாத்திமா நஸீஹா மற்றும் அப்பாடசாலைபாடசாலையிலிருந்த பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டவர்கள், புலமைப்பரிசில்சித்தியடைந்த மாணவர்கள் நிணைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்படட்னர்.
இந்த முப்பெரும் விழாவுக்கான முழு அனுசரனையினை மைஹோப் மற்றும் ஐவா தாதியர்கல்லூரி என்பவற்றின் அதிபர் லயன் சித்தீக் நதீர் எம்.ஜே.எப், வழங்கியிருந்தார்
இந்த நிகழ்வின்போது மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் நிதி ஒதக்கிட்டின்மூலம் கொள்வன செய்யப்பட்ட புறஜெக்டர் இயந்திம் செயலாளர் எம்.முனாஸ் அவர்களினால்பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment