அமெரிக்க பல்கலைக் கழகமானது இலங்கையில் அமைப்பதற்கான நடவடிக்கைள்

பைஷல் இஸ்மாயில்-

லங்கைக்கான துருக்கி நாட்டு தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் மெஹ்மட் அக்தாசை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப் மற்றும் கேர்ன் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கேர்ன் அமெரிக்க பல்கலைக் கழகமானது துருக்கி, சைப்ரஸ், லண்டன், அமெரிக்கா, சிங்கபூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது. குறித்த பல்கலைக் கழகத்தினால் சகல துறைகளுக்குமான பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

மெட்ரோபொலிடன் கல்லூரியோடு இணைந்து குறித்த பல்கலைக்கழகத்தினை இலங்கையில் அமைப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் இந்தச் சந்திப்பின்போது கேர்ன் அமெரிக்க பல்கலைக்கழகத்தினை இலங்கையில் அமைப்பது மற்றும் இலங்கை மாணவர்களை கேர்ன் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு கற்றல் செயற்பாட்டிற்காக அனுப்புதல் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :