கல்முனை நகரில் இயங்கி வந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையம் இயங்காமல் ஸ்தம்பிதம்

ஏ.எம். ஹூசைனி-

ல்முனை நகரில் இயங்கி வந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையம் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்திருக்கின்ற நிலையில் அதனை மீண்டும் இயங்கவைக்க கரிசனை எடுத்து செயற்படுகின்றமைக்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஸாட் பதியுதினுக்கு சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சாய்ந்தமருது சபீட்சம் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் இதுவிடயமாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1979 இலிருந்து 1983 வரை கல்முனை நகரில் இயங்கி வந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையம் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. கல்முனை பிரதேச மற்றும் கல்முனை நகரினை அன்மித்த பிரதேச மக்களின் நன்மை கருதி புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தினை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு ஆவண செய்யப்பட வேண்டும் என்றும் இவ்விடயமாக விசேட கவனத்தை செலுத்துமாறும் கோரி சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தினால் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிற்கு மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதுபோல் பிரதேச அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் இம்மகஜரின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் நேரில் சென்றும் விடயங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இதனை கரிசனையில் எடுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுதின் அவர்களினால் போக்குவரத்து அமைச்சருக்கு குறித்த விடயம் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க விடயமாகும். இது தொடர்பில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் கரிசனையுடன் செயற்பட்டு மக்களின் நன்மை கருதி புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறப்பதற்கு உச்ச பங்களிப்பை செய்வார் என பிரதேச மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :