இலங்கையின் முதன் முதலில் கணனிமயப்படுத்தப்பட்டு தொழில் விசா வழங்கும் முறை



அஸ்ரப் ஏ சமத்-

லங்கையுடன் ஜக்கிய அரபு எமிரேட்ஸின் உறவுகள் மிகவும் பலம் பொருந்தியதாகும். இலங்கையின் முதன் முதலில் துபாய் நாட்டின் கணனிமயப்படுத்தப்பட்டு தொழில் விசா வழங்கும் முறையை அறிகுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக பாரிய அளவிலான துபாய் நாட்டவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கை வந்து போகின்றனர். இலங்கையர் கூடுதலனோர் அந்த நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மேற்கண்டவாறு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீறிஸ் கொழும்பு 7 தும்முல்ல சந்தியில் ஜக்கிய அரபு எமிரேட்சின் புதிய விசா வழங்கும் அழுவலகத்தை இன்று காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.

இந் நிகழ்வில் துபாய் நாட்டில் இருந்து வருகை தந்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் மொஹமட் மீர் அப்துல்லா அல் ராசி மற்றும் அமைச்சர்களான அதாவுட செனவிரத்தின, திலான் பெரேரா, றவுப் ஹக்கீம் ஜக்கிய அரபு எமிரேட்சின் தூதுவர் அப்துல்ஹாமீட் ஏ.கே.முல்லா ஆகியோறும் கலந்து கொண்டனர்.

கடந்த ஜ.நா. மனித உரிமை கூட்டத்தொடரில் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததுள்ளது. துபாய் நாட்டு அரசரை எமது ஜனாதிபதி இரு முறை சந்தித்துள்ளார். அந்த நாட்டுக்கு இரண்டு முறை போகியிருக்கின்றார். அண்மையில் நியோர்க்கில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அரபு நாட்டுத் பல தலைவர்களைச் சந்தித்தார். அவரின் சந்திப்பில் தெரிவித்தாவது ' இலங்கை நாட்டில் வாழும் முஸ்லீம்கள் எனது நண்பர்கள் எனது இலங்கை மக்கள் அவர்களுக்கு ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பது எனது தலையாய கடமையாகும்.' என அரபு நாடுகளின் தலைவர்களிடம் கூறியிருந்ததை இங்கு பேராசிரியர் பீரிஸ் இங்கு ஞாபகப்படுத்தினார்.

என்னை வள அரபு நாடுகளின் தலைவரைச் சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாரே தெரிவித்தார் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் நவம்பர் மாதம் முற்பகுதியில் அவர் இலங்கை வர உள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :