சுலைமான் றாபி-
நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (06.10.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் காலை 6.40 மணியளவில் நடைபெற்றது.
இந்தப்பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து எம்.றியாஸ் மௌலவி அவர்களால் "பிறைக் கணக்கு" எனும் தலைப்பில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
இந்த பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் நிந்தவூர் தௌஹீத் ஜமாத்தினரால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கற்கை நெறி பயிற்சி நெறியில் சித்தியடைந்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment