கல்முனை மாநகர சபை உறுப்பினர் றஹ்மான் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகள்

பி.எம்.எம்.ஏ.காதர்-

ம்பாறை கரையோர மாவட்டமும், மருதமுனை, பெரிய நீலாவணை பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி சபை என்பன அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவசரக்; கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது;

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். மூன்றாவது தடவையும் தாங்கள்தான் ஜனாதிபதி என்பது உறுதியான விடயம் என்பதுடன் தங்களுடைய வெற்றிக்காக என்றென்றும் பிரார்த்திற்கின்றேன்;;.

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் மேலே குறிப்பிட்ட பிரதேசத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தலைப்பிலான விடயங்களை உடன் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்;படுத்தும் மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில் இப்பிரதேச மக்கள் சார்பாக தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி அம்பாறை கரையோர மாவட்டத்தையும், மருதமுனை, பெரிய நீலாவணை பிரதேசங்களுக்கான நகர சபை அல்லது பிரதேச சபை என்பவற்றை உருவாக்குவதன் மூலம் அம்பாறை கரையோர மாவட்ட மக்கள் நன்றிக்;கடன் செலுத்தவார்கள் என நான் திடமாக நம்புகின்றேன்.

அம்பாறை கரையோர மாவட்டம் இப்பிரதேச மக்களின் நீண்ட காலக் கனவாகும் அக்கனவை நனவாக்க தாங்கள் உதவி செய்ய வேண்டும் என தங்களை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியொன்று உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :