பி.எம்.எம்.ஏ.காதர்-
பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எச்.குமாயூன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா புதிய அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தலைமையில் இன்று (28-10-2014)நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களும், கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களும் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சீ.எம்.தௌபீக்,எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா,எஸ்எம.;எம்.அமீர்,எம்.எச்.எம்,ஜாபீர், பி.எம்.யாஸீர் அறபாத், கல்முனை ஸாஹிறா கல்லுரி அதிபர்,பி.எம்.எம.;பதுறுத்தீன்,உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், உள்ளீட்ட மருதமுனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்,பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அதிபர் எம்.எச்.குமாயூன் மாலை அணிவித்து பேன்ட் வாத்தியம் முழங்க பாடசாலை சமூகத்தால் வரவேற்கப்பட்டார். பின்னர் பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலையின் பழைய மாணவர் எம்.சி.நஸார் ஆசிரியர் வாழ்த்துப்பத்திரம் வாசித்து வழங்கினார். பழைய புதிய மாணவர்களால் நினைவுச்சின்னம் நினைவுப் பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவரின் நினைவாக 'அங்கிதம்' என்ற பெயரில் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன. பழைய மாணவர் சஹீட் எம் சப்றின் நிகழ்ச்;சிகளைத் தொகுத்து வழங்கினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment