சர்வதேசப் பிறை ஒற்றுமையைச் சீர்குழைக்கிறதா?

எம்.எம்.ஏ.ஸமட்-

ந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களாகி நாம் என்றுமில்லாத அளவு பல நெருக்கடிகளை கடும்போக்காளர்களினால் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களை எந்தந்தத் துறைகளிலெல்லாம் நெருக்க வேண்டுமோ அவற்றைத் திட்டமிட்டு புரிவதற்கு கடும்போக்காளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கு நம்மவர்களையே பயன்படுத்தவும் செய்கின்றனர்.

முஸ்லிம்களுக்கெதிராக மறைமுகமாகச் செயற்பட்டு வந்த கடும்போக்காளர்கள் கட்நத 2012ஆம் ஆண்டு பொது பல சேiனா என்ற இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து நாம் உண்ணும் உணவு முறை முதல் அணியும் ஆடை வரையில் முஸ்லிம்களின் கலை, கலாசார மத வழிபாட்டு நடவடிக்கைகளுத் தொடர்ச்சியாக நெருக்குவாரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அவற்றை உணராத மூளையற்றவர்களாக நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்ற நிலையில் சமூகத்திலுள்ள சில கூட்டங்கள் இன்னுமே தங்களை மாற்றிக்கொள்ளாமல் செயற்படுவதையிட்டு கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது.

அரசியல் ரீதியாகவும் ஆண்மீக ரீதியாவும்; பிரிந்து செயற்பட்டு, நமது பலவீனத்தை நாமே புடம்போட்டுக் காட்டுவது மட்டுமன்றி, நம்மை நெருக்குவதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் கடும்போக்காளார்களுக்கு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு, ஏனைய சமூகங்கள் மத்தியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேவலமாககப் பார்க்கச் செய்யவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் கவலையளிக்கிறது.

இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களை பரம்பரை முஸ்லிம்கள் என்றும் அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் என கடும்போக்காளர்களினால் பாகுபடுத்தப்படும் ஒரு கால கட்டத்தில், இந்நாட்டு அரசாங்கம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் 6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவதற்கு விடுமுறை வழங்கியுள்ள நிலையில், நீங்கள் எதைச் செய்தாலும் இந்தச் சமூகத்திற்கு எது நடந்தாலும் நாங்கள் மாற மாட்டோம், நாங்கள் ஒற்றுமைப்பட மாட்டோம். எங்கள் கொள்கையே எங்களுக்கு மேல். ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்துக்கொண்டே இருப்போம் என்று ஏனைய சமூகங்களுக்கு காட்டிக்கொடுக்கும் வகையில் 'சர்வதேச பிறையாளர்கள்' இன்று(4.10.2014) தியாகத் திருநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய வருடங்கள் 12 மாதங்கள். இந்தப் 12 மாதங்களின் தொடக்கமும் முடிவும் பிறையின் அடிப்படையிலேயே இடம்பெறுகிறது. ஒரு நாட்டில் ஒரு சமூகமாக வாழுகின்ற நாம் ஒருதலைமைத்துவக் கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு வாழ்வதுதான் இன்றைய கால கட்டத்தின் தேவையுமாகவுள்ளது.

தலைமைத்துவங்கள் தவறிழைக்கலாம். அத்தவறுகள் திருத்தப்பட முயற்சிக்கலாம். ஆனால் தலைமைத்துவங்கள் தவறு இழைத்துவிட்டது அல்லது தவறிழைக்கிறது என்பதற்காக ஒரு சமூகத்தின் ஒற்றுமையை சீர்குழைப்பதது எந்ந வகையில் நியாயமாகும்
நோன்புக்கும் பெருநாள்களுக்கும் சர்வதேச பிறையைப் பார்க்கும் 'சர்வதேச பிறையாளர்கள்' ஏனைய இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் எந்தப் பிறையைப் பார்க்கின்றனர்.

அவர்களின் திருமணங்கள் உட்பட ஏனைய விடயங்களை எந்தப் பிறையைக் கொண்டு தீர்மானிக்கின்றனர். இந்நாட்டில் வாழுகின்ற'சர்வதேச பிறையாளர்கள்' இவ்வாறு செயற்படுவதன் ஊடாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒற்றுமையற்றவர்கள் என்று காட்டிக் கொடுப்பதாக கருதவில்லையா? இந்தச் 'சர்வதேச பிறையாளர்கள்' களின் பெருநாள் தொழுகையை படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்புகின்ற சகோதர ஊடகவியலாளர்கள் 'சர்வதேச பிறையாளர்கள்' களின்; செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகங்கள் மத்தியில் ஏலனப்படுத்துவதாக, நகைப்புக்குள்ளாக்குவதாக உணரவில்லையா?

ஒரு சமூகத்தின் ஒற்றுமையைச் சீர் குழைப்பது கொலை செய்வதற்கு சமமென நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது இவர்களுக்குத் தெரியாத? அல்லது அந்த நபி மொழி 'சர்வதேச பிறையாளர்கள்' பார்வையில் இட்டுக்கட்டப்பட்ட நபி மொழியா?

சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் எதிர்கால சந்ததியினரின் இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சமூகத்திலுள்ளோர் முயற்சி செய்து கொண்டும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டும் செயற்பட்டும் வரும் நிலையில், நாங்கள் கொண்ட கொள்கைகளுக்கு பின்னால் எல்லாமே ஜுஜுபி என்ற மனப்பாங்கில் செயற்படும் இந்த 'சர்வதேச பிறையாளர்கள்' ; மனங்களில் யா அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்துவாயாக! இவர்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் ஏலனப்படுத்தப்படாமல் பாதுகாப்பாயாக ஆமீன்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :