மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரனை 30-10-2014 நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 24ம் திகதிக்கு குறித்த மனித புதைகுழியை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டதாகவும்,அதற்கு முன்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 திகதி தோண்டப்படவுள்;ள குருக்கள்மடம் மனித புதைகுழியை தோண்டுவதற்கான என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பில் நவம்பர் மாதம் 13ம் திகதி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் குருக்கள்மடம் மனித புதைகுழியை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 திகதி தோண்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதை தங்களால் உறுதி செய்ய முடிகின்றது எனவும் தெரிவித்தார்.
%2Bcopy.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment