அமைச்சர் மன்சூர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்!

அலுவலக செய்தியாளர்-


டந்த 2013ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வெளிவந்த முஸ்லிம் முரசு வாரப் பத்திரிகையில் அமைச்சர் மன்சூரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளிவந்த அறிக்கையை ஆட்சேபித்து குறித்த பத்திரிகைக்கு எதிராக மான நஷ்ட ஈடாக 500 மில்லியன் கோரி அமைச்சரினால் கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளை 2014.10.07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் வாக்கு மூலத்திற்காக நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், சேவைகளையும் செய்து வருவதை பொறுக்க முடியாத சில தீய சக்திகள் இந்த சுடர் ஒளிப்பத்திரிகையின் துணைப்பத்திரிகையைப் பயன்படுத்தி களங்கம் விளைவிக்கும் வகையில் மிக மோசமான செய்திகளை வெளியிட்டுள்ளது. 

இதனை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கானது அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களின் பக்கம் வெற்றியீட்டும் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவ்வழக்குத்தாக்கலைத் தொடர்ந்து முஸ்லிம் முரசுப் பத்திரிகையின் செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று இம்போட்மிரருக்கு அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :