முஸ்ஸம்-
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் குதித்த காதலர்கள் இருவரில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9.00 மணியளவில் கரடியனாறினை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தர்மலிங்கம் ராஜா (31) தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் மீட்கப்பட்டவர் ஞானசெல்வம் வினோ (27) என்ற பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment