எம்.ஜே.எம். முஜாஹித்-
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை இக்றஹ் வித்தியாலயம் ரூபா. 52 இலட்சம் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத் திட்டங்களை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து முதற்கட்டமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வகுப்பறைக் கட்டிடத் தொகுதியினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. கஸ்ஸாலி, அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் இணைப்புச்செயலாளர் ஏ.சி. சைபுடீன், பொறியியலாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
அங்கு விஜயம் செய்த மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அதிபரிடம் பாடசாலை குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment