த.நவோஜ்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி; முதலமைச்சருடன் நாமல்வத்தை பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்.
அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு முதலமைச்சரையும், அல்-கிம்மாவின் பணிப்பாளரையும் வரவேற்றனர். இதன்போது நாமல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சிங்கள, முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் 110 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 40 சிங்கள குடும்பங்களும், 70 முஸ்லிம் குடும்பங்களும் பயன்பெறவுள்ளனர்.
பயனாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், இங்கு சொற்பமாக வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் வாழவேண்டும், அதன் அடிப்படையிலேயே குறித்த நிறுவனத்தின் மூலம் இரு தரப்பினருக்கும் பாகுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். இதன்மூலம் ஏனைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக திகழவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
மேலும் குறித்த கிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் பஸ் போக்குவரத்து, வைத்தியசாலை, தெரு மின்விளக்கு போன்ற சில முக்கிய தேவைகளுக்குமான உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அல்-கிம்மா நிறுவனம் 50,000 ரூபாய் செலவில் 10 தெருமின் விளக்குகளை வழங்கவும், முன்பள்ளி ஆசிரியை ஒருவருக்கான மாதாந்த ஊதியத்தினை வழங்கவும் விருப்பம் தெரிவித்தது.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment