ஹரீஸ் MP கலந்து கொண்ட சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தலைவர் தின நிகழ்வு




எஸ்.எம்.அறூஸ்-

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரகடணப்படுத்திய தலைவர் தினம் இன்று அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்காக பாரிய பங்களிப்புச் செய்து தனித்துவ முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்து சாதனை படைத்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நமது எதிர்கால சந்ததிகளும் அஸ்ரபின் ஆளுமைகளை அறிந்து கொள்ளும் வகையில் தலைவர் தினத்தை ஹரீஸ் எம்.பி. பிரகடணம் செய்துள்ளார்.

அந்த வகையில் மர்ஹூம் அஸ்ரப் பற்றிய பேருரைகள், அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பணம், மரநடுகை நிகழ்வு, துஆப் பிரார்த்தனை என்பன இன்று பல பிரதேசங்களிலும் இட்ம்பெற்று வருகின்றது.

பொறுப்பு வாய்ந்த பலரும் அஸ்ரபை மறந்து பதவிகளில் சஞ்சரித்து உலாவருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். சுமார் 30 இடங்களில் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஹரீஸ் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றியதுடன் நினைவு தின மரக்கன்றையும் நாட்டினார். அத்தோடு பாடசாலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வைத்தார். இங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :