நிஸ்மி அக்கரைப்பற்று-
லேக்ஹவுஸ்; நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் தலைமையில் தினகரன் மற்றும் தினகரன் வார மஞ்சரி; முதலியவற்றின் ஆசிரியர் பீட அதிகாரிகளுக்கும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (14.09.2014) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று விபுலாநந்தர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அக்கரைப்பற்று விபுலாநந்தர் சிறுவர் இல்லத் தலைவர் த.கைலாயபிள்ளை,
தினகரன் செய்தி ஆசிரியர் கே.குணராசா, தினகரன் வார மஞ்சரி செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி, தினகரன் பிரதி செய்தி ஆசிரியர் கே.அசோக்குமார்,
அக்கரைப்பற்று மத்திய பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவருமான தேசகீர்த்தி கலாநிதி எம்.ஐ.எம்.றபீக், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன், லேக்ஹவுஸ்; இந்து மன்ற தலைவரும், ஊடகவியலாளருமான கே.ஈஸ்வரலிங்கம் லேக்ஹவுஸ்; நிறுவன பிராந்திய செய்தியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
லேக்ஹவுஸ்; நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
ஊடகவியலாளர் சார்பில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸதீன் அவர்களால் முன்வைக்கப்பட்ட தினகரன் பத்திரிகையின் பக்கங்கள் அதிகரித்தல், கொடுப்பனவுகளை அதிகரித்தல் முதலிய பிரச்ச்pனைகளை லேக்ஹவுஸ்; நிறுவன உயர் பீடத்திற்கு சமர்ப்பித்து அனுமதி பெற்று செயற்பமுத்துவதாகவும், ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணனி வழங்கள், கணனிப்பயிற்சி வழங்கல் முதலியவற்றிற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் உறுதியளித்தார்.
ஊடகத்துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடனான சிறந்த சேவையாற்றி வருகின்ற லேக்ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், தினகரன் செய்தி ஆசிரியர் கே.குணராசா, தினகரன் வார மஞ்சரி செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி, தினகரன் பிரதி செய்தி ஆசிரியர் கே.அசோக்குமார், ஊடகத்துறை வளர்ச்சிக்கு உதவி வரும் சமுக சேவையாளரும், அக்கரைப்பற்று மத்திய பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவருமான தேசகீர்த்தி கலாநிதி எம்.ஐ.எம்.றபீக் ஆகியோர் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்;பட்டனர்.
வளர்ந்து வரும் ஊடகவியலாளரும், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களுடன் இணைந்து அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பிரதேச அபிவிருத்திக்காக சேவையாற்றிவருபவரும் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் இணைப்பாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களின் சேவையைப் பாராட்டி லேக்ஹவுஸ்; நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் அவர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment