டெங்கு அற்ற இலங்கை -அட்டாளைச்சேனையில் நிகழ்வு.





எம்.ஜே.எம்.சஜீத்-

டெங்கு அற்ற இலங்கை என்ற தொனிப்பொருளில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும், கல்வி அமைச்சும் இனைந்து நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தரம் 05 தொடக்கம் 08 வரையிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மத்தியில் சிறந்த நடத்தை மாற்றத்தினை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோலாகும் ஆகும் இதன் போது இப்போட்டியில் பங்குபற்றி முதல் இடத்தினை பெற்ற ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவி கே.எல்.நுஜைபா என்பவருக்கு 5000 ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவன் ஐ.எம். ஆதில் என்பவருக்கு 3000ரூபா பணப்பரிசும், மூன்றாம் இடத்தினை பெற்ற றஜினா பேகம் என்ற மாணவிக்கு 2000 ரூபா பணப்பரிசுகளும் வழங்க வைக்கப்பட்டதுடன 05 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரோஸா நக்பர் அவர்களும் , ஏனைய அதிதகளாக கோட்டக்கல்வி பனிப்பாளர் ஏ.கஸ்ஸாலி, சிரேச்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.ஜௌபர், முறைசாரா கல்வி அதிகாரி என்.சம்சுத்தின் மற்றும் அதிகாரிகலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :