ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சமூகத்தில் காணப்படும் விசேட தேவையுடையோரின் உரிமை, தேவை, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக அந்தஸ்து போன்றவைகளை ஏற்றுக் கொள்ள வைத்தலும், உயர் மட்ட அதிகாரிகள் ஊடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திப் பாதுகாப்பது தொடர்பான மாநாடொன்று நேற்று (13) கல்முனை திறி ஸ்டார் ஹோட்டலில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் தலைவரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்லிப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், அங்கோடை மனநோயாளர் வைத்தியசாலை உளவள வைத்திய நிபுணர் டாக்டர் எம்.கணேசன், சமூக சேவைகள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே.குணநாதன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அப்துல் ஜலீல், எஸ்.சுகிர்த ராஜன், எஸ்.மயில் வாகனம், சிறுவர் நன்நடத்தை பொறுப்பதிகாரி. எஸ்.சிவகுமார், அம்பாரை மாவட்ட உளவள வைத்திய நிபுணர்களான டாக்டர். ஜுறைஸ், டாக்டர்.சறாப்டீன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு மாகாண அமைச்சர் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த உலகில் நாம் பெற்றிருக்கின்ற அத்தனை விடயங்களும், நம்மை சோதனை செய்வதற்காகவே இறைவன் தந்திருக்கின்றான். மனைவி, மக்கள், சொத்து, சுகம், பட்டம், பதவி எல்லாமே சோதனைதான். இந்நிலையில் விசேட தேவையுடையோராய்ப் பிறந்திருப்போரின் நலன் காக்கும் நன்நோக்கில் சேர்ந்து, மாநாடு நடாத்திச் செயற்படும் உங்களுக்கு இறைவன் நற்கூலி வழங்குவான் என்பதில் ஐயமில்லை' எனத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment