பெரும்பான்மை கட்சிகளுக்கு சிறுபான்மையின் வாக்குகளை வழங்க இடமளிக்கக்கூடாது -ரஹ்மத் மன்சூர்

வாமாகாண சபைத்தேர்தலில் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளை சூறையாடுவதற்கு  பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் செயற்பட்டு வருகின்றன. அதற்கு  ஒருபோதும் இடமளிக்கும் வகையில் நாம் செயற்படக் கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 
அதியுச்சபீட உறுப்பினரும் நீதியமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான அப்துல்  ரஹ{மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபையில் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஊவா மாகாணசபைக்கான தேர்தலுக்கு இன்னமும் சொற்ப நாட்களே காணப்படுகின்றன. அவ்வாறான  நிலையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இலக்கு வைத்து பெரும்பான்மை  கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஆளும்  ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் பொன்சேகா  தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஆகியன தமது கட்சியிகளில் சிறுபான்மை இனத்தவர்களான  முஸ்லிம்களையும், தமிழர்களையும் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளன. இதன் மூலம்  சிறுபான்மையினரின் வாக்குகளை இலகுவாக அபகரித்து அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பது  அவர்களின் திட்டமாகவுள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

ஊவா மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்கள் சொற்ப அளிவில் காணப்பட்டிருக்கின்ற  போதும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் என்பது குறிப்பிடத்தக்க வகையில்  அமைந்திருக்கவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே நாம் இரட்டை இலைச்சின்னத்தில் ஜனநாய ஐக்கிய  முன்னணியாக களமிறங்கியுள்ளோம். இந்த முஸ்லிம் கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சிகளை  அச்சத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது. கடந்த காலத்தை எடுத்துப்பார்போமாகவிருந்தால்  எந்தவொரு அரசாங்கமும் முஸ்லிம்களை புறந்தள்ளி ஆட்சியமைத்த வரலாறு இருந்ததில்லை. 

அதேபோன்று குறிப்பாக முஸ்லிம்களின் தேசிய அரசியல் சக்தியாகவுள்ள மு.காவின்  பேரம்பேசும் ஆற்றலும் வலுவிழக்கவில்லை. 

முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி  ஆட்சியமைப்பதற்கும் பின்னர் தற்போதைய ஆட்சியமைப்பதற்கு மு.காவின் முதுகெலும்பு பலமே  காரணமாக இருந்துள்ளது. மு.காவின் அனுசரணையை தானாகவே இழந்த ஐ.தே.க இன்று பெரும்பான்மை  மக்களின் மனதை வெல்வதற்கு கூட முடியாத நிலையில் இருக்கின்றது. 

மேலும் தற்போதைய ஆட்சியிலும் தம்புள்ளை முதல் அளுத்கம வரையில் முஸ்லிம்கள்  பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் மறுப்பதற்கில்லை. இருப்பினும்  வடக்கு கிழக்கு உட்பட நாடாளவிய ரீதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை கருதி ஆளம் தரப்பில் மு.கா தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அதற்காக அரசின் எடுபிடிகளாக  ஒருபோதும் இருந்ததில்லை. எனவே அரசாங்கத்திற்கு வக்காளத்துவாங்குவதற்காக இந்த முஸ்லிம்  கூட்டமைப்பு என்பது எதிர்த் தரப்பினரால் முன்வைக்கப்படும் பொய்பிரசாரம் ஒன்றே ஆகும்.  அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை சிதைப்பதற்கு முயாது தாம் பெரும்பாம்பான்மையின்  மிகப்பெரும் தெரிவு எனப்தை உறுதிப்படுத்த வேண்டும். அதுவே அரசியல் ஜனநாயகமாகும். 

எமக்கு அநீதிகள் இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் குரல்கொடுப்பதற்கு எமது 
பிரதிநிதித்துவம் மிகவும் அவசியம். இதனை கடந்த கால துரதிஷ்ட வசமான சம்பவங்கள்  உணர்த்தியிருக்கின்றன. இதனைக் கருத்திற்கொண்டும் பெரும்பான்மையின் மாயவலைக்குள்  சிக்காது எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவற்காக ஜனநாயக கடமையை உரியவகையில் செய்வதே 
சாலச்சிறந்ததொன்றாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :