முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான கூட்டம்



த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லீம் மக்கள் மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.  
 
உற்பத்தித்திறன் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் வேண்டுதலின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கூட்டம் இடம் பெற்றது.
 
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், நாவலடி மற்றும் காரமுனை உள்ளிட்ட பகுதிகளில் மீள்குடியேருதல் தொடர்பில் தங்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சரிடமும், அரசாங்க அதிபரிடமும் தெளிவுபடுத்தினர்.
 
தமிழ் முஸ்லிம் என்ற சமய வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் ஆரம்ப உரையின் உருக்கமான வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் சாத்தியமான தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து கலந்துறையாடல் முடிவுற்றது.
 
இக் கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், வனவள திணைக்கள பிரதிப்பணிப்பாளர், ஓட்டமாவடி கேறளைப்பற்று தெற்கு, ஓட்டமாவடி கேறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர்கள், மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர்கள், விவசாய அமைப்புக்கள், பொத்தானை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிறுவாகிகள், மற்றும் சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :