பொத்துவில் சிங்கபுர சிங்கள வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ்

சலீம் றமீஸ்-
ள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும்  நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பொத்துவில் சிங்கபுர சிங்கள வித்தியாலயத்துக்கு அன்மையில் நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அங்கு சென்ற அமைச்சர்கள் பாடசாலைக்கு தேவையான பௌதீக வள அபிவிருத்தி தேவைகளை கேட்டறிந்ததுடன், பாடசாலை வளாகத்தினை சுற்றி பார்வையிட்டனர். 

அமைச்சர்களுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன்,  பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில்  பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான், உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :