ஓட்டமாவடி காவத்தமுனை மையவாடி வளாகத்திற்கு அதிசக்தி வாய்ந்த மின்குமிழ்களை பொருத்தும் நிகழ்வு

த.நவோஜ்-

ல்-கிம்மா நிறுவனம் செப்டெம்பர் மாதம் முதல் ஒளியூட்டி வழிகாட்டல் எனும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் முதற்கட்டப்பணியாக ஓட்டமாவடி காவத்தமுனை மையவாடி வளாகத்திற்கு அதிசக்தி வாய்ந்த மின்குமிழ்களை பொருத்தி அதனை மஸ்ஜித் பறகத் பள்ளிவாயலின் நிருவாகிகளிடம் திங்கட்கிழமை மாலை கையளித்தது.

இதன்போது அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) கருத்துத் தெரிவிக்கையில், இவ்வேலைத்திட்டமானது இரவு நேர ஜனாஸா நல்லடக்கத்திற்கு பெரிதும் உதவியாக அமையும் எனவும், எதிர் காலத்தில் குறித்த மையவாடிக்கு தேவையான மேலும் பல உதவிகளை அல்-கிம்மா நிறுவனம் நிறைவேற்றிக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், மற்றும் நிறுவனத்தின் ஆலோசகர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :