பெண்களின் உள்ளாடைகளை சபைக்குள் எடுத்துக் காட்டிய எம்.பி!

வா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் தனது பிரசாரத்தின் போது விநியோகித்த பையில் பெண்களின் உள்ளாடைகளையும் விநியோகித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவ்வாறான பையை பெளத்த குருவானர் ஒருவருக்கும் வழங்கியுள்ளார் என சபையில் நேற்று தெரிவித்த ஐ.தே.கட்சி எம்.பி. பாலிதரங்கே பண்டார பிரசாரத்தின் போது விநியோகிக்கப்பட்ட பையையும் அதற்குள்ளிருந்ததாக கூறப்படும் பெண்களின் பிரேசியர் ஒன்றையும் சபைக்குள் எடுத்துக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிர்மாணத்துறை தொழில் அபிவிருத்தி சட்ட மூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே பாலித ரங்கே பண்டார எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் பாலித ரங்கே பண்டார எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றும் போது;

ஊவா மாகாண சபைத் தேர்தலோடு அரசாங்கத்தின் இறங்கு காலம் தொடங்கி விட்டது. தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் வேட்பாளரின் இலக்கம் பதித்த பைகள் விநியோகிக்கப்பட்டதோடு அப்பைகளுக்குள் பெண்களின் உள்ளாடைகள் பொதி செய்து வழங்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாது அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெரும் தொகை பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன . இரத்தப்பரிசோதனைகள் சிறுநீர் பரிசோதனைகள் என பல்வேறு மருந்து வகைகளும் வழங்கப்பட்டன.

தேசப்பற்று தொடர்பாக பேசும் அரசாங்கம் சீனாவுக்கு கடல் வளத்தையும் காணிகளையும் அரசு தாரை வார்க்கின்றது.

இன்று நிர்மாணத்துறை அமைச்சினால் முன்வைக்கப்படும் சட்ட மூலம் கண்காணிப்பு என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே இது கொண்டு வரப்படுகிறது என்றும் பாலித ரங்கே பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :