விகிதாசார தேர்தலின் விசித்திரங்களை பதுளை மாவட்ட முஸ்லீம்கள் உணர வேண்டும்.

விகிதாசாரத் தேர்தல் முறையின் விசித்திரங்கள் பற்றியறியாத புத்தளம், குருநாகல மாவட்ட முஸ்லீம்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகளை, ஐக்கிய தேசிய கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் போட்டியிட்ட முஸ்லீம் வேட்பாளர்களுக்கு பெருவாரியாக வழங்கி தமது மாவட்டங்களுக்குரித்தான இரண்டுக்கு மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்களை பெறத்தவறியமை ஒரு வரலாற்றுத் தவறாகும். இதனை இங்கு நடைபெறவிருகின்ற மாகாணசபைத் தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லீம்கள் செய்து விடக் கூடாது. மாறாக இரட்டை இலைச் சின்னத்தில் முஸ்லீம் காங்கிரஸிலிருந்தும். மக்கள் காங்கிரஸிலிருந்தும் போட்டியிடுகின்ற முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்கி மாகாணசபையில் நமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு குருத்தலாவை, கந்துறுதெக்கக் கிராம ஜும்மாஆப் பள்ளிவாசல் முன்றலில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க் கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி குறிப்பிட்டார் அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், 

எதிர்வரும் 20.09.2014ம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் நமது பதுளை மாவட்டத்திற்குரிய முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டியது நம் எல்லோர் மீதும் கட்டாயக் கடமையாகும். இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக நமது பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த உலமாப் பெருமக்களும், மலையக முஸ்லிம் கௌன்ஸிலும், தேசிய சூறா சபையும் தொடர்ந்தேர்ச்சையாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததன் பயனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது.

01.09.2014ஆந் திகதி உலமாக்களால் பதுளையில் கூட்டப்பட்ட மாபெரும் கூட்டத்தில் இம்முறை நடைபெறவிருக்கின்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எவ்வழியிலேனும் கட்டாயமாகப் பெற்றாக வேண்டும் என்றும், அவ்வாறு வெற்றி பெறும் வேட்பாளர்கள் பதுளை மாவட்ட சூறா சபையின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் செயற்பட வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நல்ல தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அனைத்து வேட்பாளர்களும் 'பைஅத்' எனும் உறுதிமொழி செய்து கொண்டனர். இதனை அங்கு சமூகமளித்திருந்த இரு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டு சாட்சிகளாகக் கையொப்பங்களையும் இட்டனர். இதன்படி தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் பதுளை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், கல்விமான்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட சூறா சபையின் ஆலோசனைக்கமைவாகவே செயற்படவுள்ளனர்.

30 – 35 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் கொண்டு பதுளை மாவட்டத்தில் சிறு பான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களாகிய நாம் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளில் போட்டியிடுகின்றவர்களுக்கு நமது வாக்குகளை அளித்து நம் மாவட்டத்திற்குரிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஒரு போதுமே வென்றெடுக்க முடியாது. மாறாக, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நமது வாக்குகளை அளிப்பதனால் மட்டுமே நமது முஸ்லிம் சமூகத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை நம்மால் பெற முடியும்.
இந்த உண்மையை சில மாதங்களுக்கு முன்னர் புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நமக்கு நன்கு நிரூபித்து உணர்த்தியுள்ளன. 65,000 முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள புத்தளம் மாவட்டத்தில் அண்ணளவாக 15,000 விருப்பு வாக்குகளைப் பெற்ற UNP முஸ்லிம் வேட்பாளராலோ, 24,000 வாக்குகளைப் பெற்ற UPF முஸ்லிம் வேட்பாளராலோ அங்கே வெற்றியீட்ட முடியாது போய்விட்டது. ஆனால் 3,800 விருப்பு வாக்குகளை மாத்திரம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரால் அங்கே வெற்றியீட்டி புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடிந்தது.

இதேபோன்றுதான் அண்ணளவாக 90,000 முஸ்லிம்களின் வாக்குகளைக் கொண்டுள்ள குருநாகல் மாவட்டத்திலும் அதிகளவான விருப்பு வாக்குகளைப் பெற்ற ருNP யிலும், ருPகு யிலுமாகப் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 12,700 விருப்பு வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரால் அந்த மாவட்டத்திலும் வெற்றி பெற முடிந்தது.

எனவே, எதிர்வரும் 20ம் திகதி ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் நாம் ருNPஇ துஏP போன்ற கட்சிகளில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கின்ற வாக்குகளால் அவர்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை என்பதையும், அவ்வாறு நாம் அளிக்கின்ற வாக்குகளால் அக்கட்சிகளில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை இன வேட்பாளர்களே இலகுவாக வெற்றி பெறுவார்கள் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நமது முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளிக்கின்ற வாக்குகளின் மூலமாக மாத்திரமே நாம் வெற்றி பெற்று பதுளை மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என்பதையும் மிகத்தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தீர்க்கதரிசனமும், தெளிவான பார்வையுமின்றிச் செயற்பட்டு 2009ம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் நாம் நமது பிரதிநிதித்துவத்தைப் பாழாக்கியது போன்று இம்முறையும் நடந்து கொள்ளக்கூடாது. எவ்வாறேனும் நமது முஸ்லிம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எம்மை வழி நடாத்துகின்ற பதுளை மாவட்ட சூறா சபையின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து முஸ்லிம்களும் கட்சி பேதங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் நம் சமூகத்தின் பெயரால் ஐக்கியப்பட்டு, ஒற்றுமை எனும் பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்தவர்களாக நமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வெற்றிகொள்ள இரட்டை இலைச் சின்னத்திற்கே நமது வாக்குகளை அளித்து நாமும் வெற்றி பெற்று, நமது சமூகத்தையும் வெற்றி பெறச் செய்வோமாக என்றும் தெரிவித்தார்.

நிஸார் ஹாஜியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மு.கா.வின் தேசியத் தலைவர், நீதி அமைச்சர் அல்-ஹாஜ் றஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் அல்-ஹாஜ் ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் பைஸால் காசிம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் உட்பட பல மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் உரை நிகழ்த்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :