சலீம் றமீஸ், சுலைமான் றாபி,ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்,எ.எல்.றமீஸ்-
மஹிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழிகாட்டலில் மாகாண குறித்தொகுத்திய அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிட திறப்பு விழா வைபவ ரீதியாக இன்று பாடசாலையின் அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆளுனருடன்; கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஏ.எம்.ஜெமீல், எம்.எஸ்.ஏ.அமீர், ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், உட்பட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.என்.ஏ.புஸ்பகுமார, மாகாணப் பணிப்பாளர் என்.ரி.எ.நிஸாம், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், நிந்தவூர் கோட்டக்கல்விக் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெப்பை உட்பட கல்வி உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment