தலைவர் தின அபிவிருத்தியில் திதுலன 2ஆம் கட்டம் சாய்ந்தமருதில்-படங்கள்






ஹாசிப் யாஸீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரஃபின் 'தலைவர் தின அபிவிருத்தி வாரத்தையிட்டு' திதுலன அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளுக்கினங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் விளையாட்டுத்துறை அமைச்சினதும் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது அபிவிருத்திப் பெருவிழா நிகழ்வின் கீழ் பல்வேறு அபிவிருத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது வீதி அபிவிருத்தி,பாடசாலை அபிவிருத்தி, விளையாட்டு மைதான அபிவிருத்தி, புதிய மையவாடி அபிவிருத்தி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் அலுவலக கட்டிட அபிவிருத்தி போன்ற 20 வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது பிரதான வீதி நவீன மின்விளக்கு அபிவிருத்திட்டம் திறந்து வைக்கப்பட்டு பஸார் ஒளியூட்டப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பித்தும் திறந்தும் வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகளில் பெரும்பாலான கல்விமான்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டு அதிதிகளை நாட்டுப்புற குரவை மூலம் வரவேற்றனர். 
 
இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக சாய்ந்தமருது அபிவிருத்திப் பெருவிழா பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :