ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரைக்காணவில்லை

பைஷல் இஸ்மாயில்-

வா மாகாணத்தில் தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் கிழக்கில் இருந்து மாத்திரமல்லாமல் முழு இலங்கையிலும் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் பதுளையில் முகாமிட்டுத் தங்கி இருந்து தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் கபினட் அமைச்சும் பெற்றுள்ள ஒருவர் இதுவரை அங்கு சென்று பார்வையிடாதது கட்சி முக்கியச்தர்கள் போராளிகள் மத்தியில் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

தங்களது சொந்தப்பணங்களைச் செலவு செய்து இரவு பகலாக கட்சிக்காகவும் முஸ்லீம் சமூகத்தின் வெற்றிக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சகல வளங்களையும்  பெற்றுள்ளவர்கள் எந்த ஒத்துளைப்போ சலுகையோ வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என பலராலும் பேசப்படுகிறது.

பணங்களை கொட்டி தேர்தல் பணியில் ஈடுபடவேண்டியவர்கள் தானும் தன் தொழிலும் என்று எது எக்கேடு கெட்டாலும் தனக்குரியது சரியாக நடந்தால் மட்டும் போதும் என்று நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் கட்சிப்போராளிகள் அங்கலாய்க்கின்றனர்.

எந்த மாவட்டங்களிலும் செய்யாத தேர்தல் வேலையினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இரவு பகலாக பதுளையில் ஒரு சிறிய கூட்டமும் தவற விடாமல் தூக்கமின்றி நேரத்துக்கு உணவின்றி சகல இடங்களுக்கும் சென்று அந்த மக்களைச் சந்தித்து பெரும் சவாலுடன் இத் தேர்தல் பணியினை மேற்கொண்டிருப்பது கட்சியின் தொண்டர்கள், போராளிகளுக்கு சந்தோஷமளிப்பதாகவும் இந்த பரிதாப நிலை கண்டு கவலையளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே கட்சியால் சகல அனுகூலங்களையும் பெற்றவர்கள் இவ்வாறு கட்சிப் பணிகள் செய்யாது மேடைப்பேச்சாளர்களாக மட்டும் இருந்துவிட்டுப்போவதும், மேடையில் பேசிவிட்டால் மட்டும் போதும் என்று நினைப்பதும் கேவலமான ஒன்றாகத்தான் காணமுடிகிறது. மக்களுடன் மக்களாக மக்களுக்குத் தேவையான உதவிகளுடன் தேர்தல் பணிகளில் இறங்கி சேவையாற்றுவதுதான் அனைவராலும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகத் திகழும் அம்பாரை மாவட்டத்தில் இருந்து பிரதேச சபை உறுப்பினர்கள் தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்வரை தங்களது தொண்டர்களுடன் அவர்காளின் பணங்களைச்செலவு செய்து பதுளையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளதனைப் பார்கின்றபோது இம்மாட்டத்துக்கு அமைச்சுப்பதவி மட்டுமன்றி முதலமைச்சும் கொடுக்க வேண்டும் என்ற கசப்பான கோரிக்கையையும் தலமைக்கு விடவேண்டும் என்றும் போராளிகள் கூறுகின்றனர்.

மாறாக சகல பொறுப்பும் அமைச்சும் எல்லாமே பெற்றுள்ள சிலர் அவர்களின் பிரதேச சபைகளையே தங்களால் வெற்றிபெற வக்கில்லாமல் இருந்து கொண்டிருப்பது ஏன் என்பது இன்றய நிலவரம் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகத் தெரிகிறது. என்றும் போராளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே சமூகத்தின் வெற்றிக்காக முன்னின்று செயற்படாத எவருக்கும் கட்சியில் எந்த முக்கிய பொறுப்புக்களோ பதவிகளோ வழங்கக்ககூடாது என்று தலைவரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் போராளிகள் பேசிக்கொள்வது எங்கள் காதுகளிலும் ஒலிக்கிறது.

பதுளைத்தேர்தல் பணிகளில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளார்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து களத்தில் நின்று பணியாற்றுவது அனைவராலும் வரவேற்கத்தக்கது அதற்காக பாராட்டுக்களும் தெரிவிக்க வேண்டும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :